புதுடெல்லி: மாநிலங்களவையில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்தின் மீது தி.மு.க. எம்.பி டாக்டர் கனிமொழி என்.வி.என். சோமு பேசியதில்,“ ஒன்றிய அரசு பட்ஜெட்டில் சுமார் ஏழரை கோடி மக்கள் தொகை கொண்ட தமிழ்நாட்டை, அதன் நலனை முற்றிலுமாகப் புறக்கணித்துள்ளது. இது மாற்றாந்தாய் மனப்பான்மை ஆகும்.தமிழ்நாட்டின் ஆளுநராக உள்ள ஆர்.என் ரவியை திரும்பப்பெற வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறோம். ஆனால் அதனை ஒன்றிய அரசு செய்யாமல் தமிழ்நாடு அரசுக்கும், ஆளுநருக்கும் நடக்கும் விவகாரத்தை வேடிக்கை பார்த்து வருகிறது.இவ்வாறு அவர் பேசினார்.
கோதுமை ஒதுக்கீடு: மாநிலங்களவையில் திமுக எம்பி கே.ஆர்.என்.ராஜேஷ்குமார் ஒரு முக்கிய கோரிக்கையை முன்வைத்தார். அதில்,“தமிழ்நாட்டுக்கு கோதுமை தேவை அதிகமாக இருக்கிறது. குறிப்பாக 8500டன் தான் வழங்கப்படுகிறது. இது போதுமானது கிடையாது. எனவே இருபதாயிரம் டன் கோதுமையை தமிழ்நாட்டுக்கு வழங்கிட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். இதற்கு பதிலளித்த ஒன்றிய அமைச்சர் பிரகலாத் ஜோஷி,”கோதுமை வழங்கும் விவகாரத்தில் இருக்கும் நிலவரத்தை அடிப்படையாக கொண்டு விகிதாச்சாரத்தின் அடிப்படையில் தான் கொடுக்கப்படுகிறது. தமிழ்நாட்டுக்கும் அப்படி தான் கொடுப்போம். அவ்வாறு தான் நடக்கும் என்றார்.
தடுப்பூசி மையம்: மக்களவையில் தி.மு.க. எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் விதி எண் 377-ன் கீழ் வலியுறுத்தி பேசியதில்,”தமிழ்நாட்டின் செங்கல்பட்டில் சுமார் ரூ.800 கோடி முதலீட்டுடன் கூடிய ஒன்றிய அரசின் எச்.எல்.எல் பயோடெக் லிமிடெட் நிறுவனம் 12 ஆண்டுகளாக செயல்படாமல் உள்ளது இந்த தடுப்பூசி மையத்தை தமிழ்நாடு அரசுக்கு தர வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.
The post தமிழ்நாடு ஆளுநர் விவகாரத்தை ஒன்றிய அரசு வேடிக்கை பார்க்கிறது: மாநிலங்களவையில் திமுக குற்றச்சாட்டு appeared first on Dinakaran.