டெல்லி: தமிழ்நாட்டின் ஆழ்கடல் பகுதியில் எண்ணெய் எரிவாயு எடுக்க ஓ.என்.ஜி.சிக்கு ஒன்றிய அரசு அனுமதி வழங்கியது. ஒன்றிய எரிசக்தி இயக்குனரகம் சார்பாக எண்ணெய், எரிவாயு எடுக்க கடந்த ஜனவரி 2024ல் 9வது சுற்று ஏலம் விடப்பட்டது. தமிழ்நாட்டில் ஆழ்கடல் பகுதியில் 4 வட்டாரங்கள் உட்பட நாடு முழுவதும் 28 வட்டாரங்களில் 1,36,596 சதுர கி.மீ. ஏலம் விடப்பட்டது.
தமிழகத்தில் கன்னியாகுமரி அருகே 3 , சென்னைக்கு அருகே 1 ஆழ்கடலில் எண்ணெய் எடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. டெல்லியில் கடந்த வாரம் ஏலம் இறுதி செய்யப்பட்டு தமிழக ஆழ்கடல் பகுதிகளில் எண்ணெய், எரிவாயு எடுக்க ஓஎன்ஜிசிக்கு அனுமதி வழங்கப்பட்டது.
ஆழ்கடலில் எண்ணெய், எரிவாயு ஆகியவற்றை எடுப்பதால் கடல் வளங்கள் பாதிக்கப்படும் என்றும் சரிசெய்ய முடியாத சுற்றுச்சூழல் பேரழிவு ஏற்படும் என்றும் சூழலியல் ஆர்வலர்கள் கூறுகின்றனர். ஓஎன்ஜிசிக்கு வழங்கப்பட்டுள்ள அனுமதியை எதிர்த்து தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்துகின்றனர்.
The post தமிழ்நாட்டின் ஆழ்கடல் பகுதியில் எண்ணெய் எரிவாயு எடுக்க ஓஎன்ஜிசிக்கு அனுமதி: ஒன்றிய அரசு appeared first on Dinakaran.