புதுடெல்லி: காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 37வது கூட்டம் அதன் தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் காணொலி வாயிலாக நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா மற்றும் புதுச்சேரி மாநில அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதில் தமிழ்நாடு தரப்பில் நீர்வளத்துறை செயலாளர் மணிவாசன், காவிரி தொழில்நுட்பக் குழு தலைவர் சுப்பிரமணியன் ஆகியோர் பங்கேற்றனர். கூட்டத்தில் தமிழ்நாடு அதிகாரிகள் வலியுறுத்தியதில்,“மேட்டூர் அணை பாசனத்திற்காக வெளியேற்றப்பட்டு வந்த நீர் தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்ற ஆணையின்படி 2025 பிப்ரவரி 1ம் தேதி முதல், மே. 31ம் தேதிவரை மாதந்தோறும் தமிழ்நாட்டிற்கு வழங்கப்பட வேண்டிய 25டி.எம்.சியை கர்நாடகம் திறந்து விடும் நீரை பில்லிகுண்டுலுவில் ஆணையம் உறுதிசெய்ய வேண்டும். என்று வலியுறுத்தினார்.
ஆனால் இதற்கு கர்நாடகா அரசு தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.இதேப்போன்று கேரளா மற்றும் புதுவை மாநில அதிகாரிகள் தங்களது தரப்பு கோரிக்கைகளை முன்வைத்தனர். இதையடுத்து ஆணையத்தின் தலைவர் ஹல்தர் பிறப்பித்த உத்தரவில்,” காவிரியில் இருந்து தமிழ்நாட்டுக்கு பிப்ரவரி முதல் மே மாதம் வரையிலான நீர் பங்கீடான 10 டி.எம்.சி. தண்ணீரை கர்நாடகா அரசு திறக்க விட வேண்டும். அதேபோன்று இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் முன்னதாக வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் மாதந்தோறும் காவிரியில் இருந்து தண்ணீரை கர்நாடகா அரசு தமிழ்நாட்டுக்கு திறந்து விட வேண்டும் என உத்தரவிட்டார்.
The post தமிழ்நாட்டுக்கு காவிரியில் 10 டி.எம்.சி. தண்ணீரை திறக்க வேண்டும்: மேலாண்மை ஆணையம் கர்நாடகாவுக்கு உத்தரவு appeared first on Dinakaran.