தவறான முறையில் மருத்துவ விளம்பரங்களை வெளியிட்டதற்கான வழக்கில் பதஞ்சலி நிறுவனர்கள் பாபா ராம்தேவ் மற்றும் ஆச்சர்யா பாலகிருஷ்ணா ஆகியோருக்கு எதிராக ஜாமீனில் வெளிவரமுடியாத வாரண்டை பிறப்பித்து கேரள நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தவறான மருத்துவ விளம்பரங்களை வெளியிட்டது தொடர்பாக பதஞ்சலி நிறுவனத்தின் துணை நிறுவனமான திவ்ய பார்மசிக்கு எதிராக கேரள மருத்துவ ஆய்வாளர் வழக்கு தொடர்ந்தார். அதில், அந்நிறுவனம் விளம்பர விதிமுறைகளை மீறி செயல்பட்டதாக அவர் குற்றம்சாட்டியிருந்தார்.