‘தி ராஜா சாப்’ படத்தின் பாடல்களை மீண்டும் உருவாக்க இருப்பதாக இசையமைப்பாளர் தமன் தெரிவித்துள்ளார்.
பிரபாஸ் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘தி ராஜா சாப்’. யுவி கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்துக்கு தமன் இசையமைத்து வருகிறார். இப்படம் நீண்ட மாதங்களாக தயாரிப்பில் இருக்கிறது. எப்போது படப்பிடிப்பு முடிவடையும், எப்போது வெளியீடு உள்ளிட்ட எதுவுமே தெரியாமல் உள்ளது.