டெல்லி :இளம் வயதினர் திடீர் மரணத்துக்கு கொரோனா தடுப்பூசி காரணமல்ல என்று திமுக எம்.பி. கனிமொழி சோமுவின் கேள்விக்கு, மத்திய சுகாதாரத் துறை இணை அமைச்சர் பிரதாப் ராவ் ஜாதவ் விளக்கம் அளித்துள்ளார். 35 முதல் 55 வயதுள்ளோருக்கு திடீர் மாரடைப்பு, இதய நோய்களுக்கு கொரோனா ஊசி காரணமா என ஆய்வு நடந்ததா? என்ற கேள்விக்கு, 18-45 வயதுள்ளோர் திடீர் உயிரிழப்பு தொடர்பாக ICMR 2023 மே முதல் ஆகஸ்ட் வரை ஆய்வு நடத்தியது, 2 தவணை தடுப்பூசி செலுத்தியிருந்தால் மரண வாய்ப்பு குறைவு என அமைச்சர் பதில் அளித்தார்.
The post திடீர் உயிரிழப்புக்கு கொரோனா தடுப்பூசி காரணமல்ல : ஒன்றிய அரசு பதில் appeared first on Dinakaran.