அமராவதி: திருப்பதி அருகே முன்னாள் சென்று கொண்டிருந்த கன்டெய்னர் லாரி மீது கார் மோதிய விபத்தில் தமிழ்நாட்டை சேர்ந்த 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே பூத்தலப்பட்டு – நாயுடுபேட்டை தேசிய நெடுஞ்சாலையில் பாகாலா மண்டலம் தோட்டப்பள்ளி என்ற இடத்தில் முன்னால் சென்ற கண்டெய்னர் லாரி மீது அதிவேகமாக சென்ற கார் மோதி விபத்துக்குள்ளானது.
கன்டெய்னர் லாரிக்கு அடியில் கார் சிக்கி கொண்ட நிலையில், காரில் பயணம் செய்த 2 ஆண்கள், 2 பெண்கள் மற்றும் ஒரு சிறுவன் உட்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், இருவர் படுகாயம் அடைந்துள்ளனர். அங்கு இருந்த வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் உதவியுடன் பலத்த காயத்துடன் மீட்கப்பட்ட 2 பேர் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் அனைவரும் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், அவர்கள் எந்த ஊரைச் சேர்ந்தவர்கள் என்பது குறித்து ஆந்திர போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post திருப்பதி அருகே கன்டெய்னர் லாரி மீது கார் மோதிய விபத்து: தமிழ்நாட்டை சேர்ந்த 5 பேர் உயிரிழப்பு; 2 பேர் காயம்! appeared first on Dinakaran.