திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மாசி மாத பவுர்ணமி முன்னிட்டு ஆண்டுதோறும் 5 நாட்கள் தெப்பல் உற்சவம் நடப்பது வழக்கம். அதன்படி இந்தாண்டு வருடாந்திர தெப்பல் உற்சவத்தின் முதல் நாளான நேற்றுமுன்தினம் சீதா, ராமர், லக்ஷ்மணர் அஞ்சநேயருடன் தெப்பலில் எழுந்தருளி தெப்பக்குளத்தில் வலம் வந்தார். இரண்டாம் நாளான நேற்று ருக்மணி தாயார் சமேத கிருஷ்ணர் அலங்கரிக்கப்பட்ட தெப்பலில் எழுந்தருளி வலம் வந்து அருள்பாலித்தனர்.
இதற்காக மின் விளக்குகள் மற்றும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தெப்பலில் சுவாமி 3 சுற்றுகள் தெப்பக்குளத்தை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கோயில் தெப்பக்குளத்தை சுற்றி ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு கற்பூரம் ஆரத்தி எடுத்து தரிசனம் செய்தனர். மூன்றாம் நாளான இன்று முதல் மூன்று நாட்களுக்கு மலையப்பசுவாமி, தேவி, பூதேவி தாயாருடன் அலங்கரிக்கப்பட்ட தெப்பலில் எழுந்தருளி அருள்பாலிக்க உள்ளனர்.
The post திருப்பதி ஏழுமலையான் கோயில் 2ம் நாள் தெப்பல் உற்சவத்தில் அருள்பாலித்த ருக்மணி, கிருஷ்ணர் appeared first on Dinakaran.