திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சொர்க்க வாசல் தரிசனத்திற்கான இலவச டோக்கன் விநியோகம் நேற்றுடன் நிறைவடைந்தது.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு கடந்த 10-ம் தேதி முதல் பக்தர்களுக்கு இலவச டோக்கன் வழங்கப்பட்டது. திருப்பதியில் 8 இடங்களிலும், திருமலையில் ஒரு இடத்திலும் டோக்கன் வழங்கப்பட்டது.