குவாலியர்: மத்தியபிரதேச மாநிலம் குவாலியரை சேர்ந்தவர் மகேஷ்குர்ஜார். இவரது 20 வயது மகள் தனுகுர்ஜார். இவருக்கு குடும்பத்தினர் ஜன.18ம் தேதி திருமணம் செய்து வைக்க நிச்சயம் செய்தனர். பெற்றோர் நிச்சயம் செய்த மணமகனை திருமணம் செய்ய தனு விரும்பவில்லை. அவர் 6 ஆண்டுகளாக காதலித்து வந்த ஆக்ராவை சேர்ந்த விக்கி என்பவரை மணக்க விரும்பினார். பெற்றோர் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், தன்னை அவர்கள் மிரட்டுவதாகவும் சமூக ஊடகங்களில் நேற்றுமுன்தினம் இரவு 9 மணிக்கு வீடியோ வெளியிட்டார். இந்த வீடியோ வைரலானதால் எஸ்பி தர்மவீர் சிங் தலைமையிலான போலீஸ் அதிகாரிகள், தனுவின் வீட்டிற்கு விரைந்தனர். அங்கு பெற்றோருக்கும், தனுவுக்கும் சமரசம் பேசினர். அந்த நேரத்தில் தனுவின் தந்தை மகேஷ்குர்ஜார், அவரது உறவினர் ராகுல் ஆகியோர் சேர்ந்து துப்பாக்கியால் தனுவை சுட்டுக்கொன்றனர். மேலும் எஸ்பி உள்ளிட்ட போலீசாரையும் துப்பாக்கியால் சுட முயன்றனர். அவர்களை போலீஸ் படை தடுத்து மகேஷ்குர்ஜாரை கைது செய்தனர். ராகுல் தப்பி ஓடிவிட்டார்.
The post திருமணத்திற்கு 4 நாள் முன்பு பெற்ற மகளை சுட்டுக்கொன்ற தந்தை: எஸ்பி முன்னிலையில் வெறிச்செயல் appeared first on Dinakaran.