புதுடெல்லி: சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளில் தீவிர நோய்வாய்ப்பட்ட கைதிகள் அல்லது 70வயதுக்கு மேற்பட்டவர்களை சிறையில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று கோரி தேசிய சட்ட சேவைகள் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது. இது குறித்து வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் சந்தீப் மேத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஜஸ்வர்யா கூறுகையில், ‘‘சிறையில் மரணமடையு்ம நிலையில் உள்ள கைதிகள் குறித்து அரசு கவலை கொண்டுள்ளது.
அத்தகைய கைதிகளை விடுவிப்பதை பொது மன்னிப்பின் ஒரு பகுதியாக கருத்தில் கொள்ளலாம்” என்று தெரிவித்தார். இதனை தொடர்ந்து ,சிறை விதிகள் அனைத்தும் மாநிலங்களுக்கு தனித்தனியாக பொருந்தும். இறுதி நோய்வாய்ப்பட்ட கைதிகளை விடுவிப்பது குறித்து பொதுவான சிறை விதிகளை வகுக்க வேண்டும் என்று வலியுறுத்திய நீதிபதிகள் விசாரணையை ஒத்திவைத்தனர்.
The post தீவிர நோய்வாய்ப்பட்ட கைதிகளை விடுவிக்க பொதுவான சிறை விதிகளை வகுக்க வேண்டும்: உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல் appeared first on Dinakaran.