தெலுங்கானா: ஸ்ரீசைலம் அணையில் இடது சுரங்கப்பாதை பணியின்போது மண்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. சுரங்கத்தில் 14 கி.மீ. தொலைவில் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்த போது திடீரென மண் சரிந்து விபத்து ஏற்பட்டுள்ளது. மண் சரிவில் 3 நாட்களாக 8 தொழிலாளர்கள் சிக்கியுள்ள நிலையில் மீட்புப் பணியில் ராணுவமும் இறங்கியது. மண் சரிந்துள்ளதுடன் நீர்க் கசிவும் இருந்து வருவதால் உள்ளே செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
The post தெலுங்கானா சுரங்கப்பாதை விபத்து: மீட்பு பணி தீவிரம் appeared first on Dinakaran.