தெலுங்கானாவில் அதிவேகமாக சென்ற கார், ஏரியில் கவிழ்ந்ததில் 5 இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். ஐதராபாத்தை சேர்ந்த 6 இளைஞர்கள் நேற்று இரவு காரில் புறப்பட்டு வெளியூர் சென்று கொண்டிருந்தனர். யாதார்திரி புவனகிரி மாவட்டம் ஜலால்பூர் என்ற இடத்தில் கட்டுப்பாட்டை இழந்த கார், ஏரியில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது. 6 பேரில் மணிகண்டா என்பவருக்கு மட்டும் நீச்சல் தெரிந்ததால் அவர் ஏரியில் இருந்து வெளியேறி உயிர்தப்பினார்.
The post தெலுங்கானாவில் அதிவேகமாக சென்ற கார், ஏரியில் கவிழ்ந்ததில் 5 இளைஞர்கள் உயிரிழப்பு appeared first on Dinakaran.