புதுடெல்லி, ஏப்.22: மேற்குவங்க மாநிலம் முர்ஷிதாபாத்தில் சமீபத்தில் வக்பு திருத்த சட்டத்திற்கு எதிராக நடைபெற்ற வன்முறை தொடர்பாக வழக்கறிஞர் விஷ்ணு சங்கர் ஜெயின் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் ஒரு பொதுநல மனுவை தாக்கல் செய்திருந்தார். இந்த உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் பி.ஆர். கவாய் மற்றும் அகஸ்டின் ஜார்ஜ் மாயிஷ் ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள்,” இந்த வழக்கில் ஒன்றிய அரசுக்கு நாங்கள் எந்தவிதமான உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என நீங்கள் நினைக்கிறீர்கள்?
ஏன் இதனை கேட்கிறோம் என்றால் ஏற்கனவே உச்ச நீதிமன்றம் அரசு நிர்வாகத்தில் தலையிடுவதாக கடுமையான குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டு வருகிறது என்று விரக்தியுடன் கருத்து தெரிவித்த நீதிபதிகள், வழக்கின் விசாரணையை ஒத்திவைத்தனர். நாடாளுமன்ற அதிகாரத்தில் அத்துமீறுவதாக துணைஜனாதிபதி உச்ச நீதிமன்றத்தை கடுமையாக விமர்சனம் செய்த நிலையில் நீதிபதிகள் இந்த கருத்தை தெரிவித்தனர்.
The post நாடாளுமன்ற அதிகாரத்தில் அத்துமீறுவதாக புகார்; நாங்கள் என்ன உத்தரவிட முடியும்?.. மேற்குவங்க விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் விரக்தி appeared first on Dinakaran.