புதுடெல்லி: நாம் தமிழர் கட்சியை மாநில கட்சியாக அங்கீகரித்து இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வௌியிட்டுள்ளது. நாம் தமிழர் கட்சி கரும்பு விவசாயி சின்னத்தில் தேர்தலில் போட்டியிட்டு வந்தது. ஆனால் கடந்தாண்டு மக்களவை தேர்தலின்போது நாம் தமிழர் கட்சியின் கரும்பு விவசாயி சின்னம் கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த ஒரு கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. நாம் தமிழர் கட்சிக்கு மைக் சின்னம் ஒதுக்கப்பட்டது. 39 தொகுதிகளில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி மொத்தம் 8.22 சதவீத வாக்குகளை பெற்றது. மாநில கட்சியாக அங்கீகரிக்கப்பட 8 சதவீத வாக்குகள் வேண்டுமென்ற நிலையில், 8.22 சதவீத வாக்குகளை பெற்ற நிலையில், நாம் தமிழர் கட்சியை மாநில கட்சியாக அங்கீகரித்து இந்திய தலைமை தேர்தல் ஆணையம் நேற்று ஆணை பிறப்பித்தது. ஆனால் நாம் தமிழர் கட்சி கேட்ட புலி மற்றும் நிலத்தை உழும் விவசாயி சின்னங்களை ஒதுக்க இந்திய தலைமை தேர்தல் ஆணையம் மறுத்து விட்டது. வேறு சின்னம் கேட்டு மனு செய்யும்படி நாம் தமிழர் கட்சிக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
The post நாம் தமிழர் கட்சிக்கு மாநில கட்சி அங்கீகாரம்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு appeared first on Dinakaran.