புதுடெல்லி: முதுகலை மாணவர்களுக்கான நீட் தேர்வு முடிவுகள் வௌியாகி பல மாதங்கள் ஆகியும் இன்னும் மாணவர் சேர்க்கை நடத்தப்படாதது ஏன்?” என காங்கிரஸ் கேள்வி எழுப்பி உள்ளது. காங்கிரஸ் பொதுசெயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தன் எக்ஸ் பதிவில், “முதுநிலை மாணவர்களுக்கான நீட் தேர்வு முடிவுகள் 2024 ஆகஸ்ட் 14ம் தேதி வௌியானது.
ஆனால் முதுநிலை மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கை இன்று(நேற்று) மார்ச் 11 2025 வரை இன்னும் முடிக்கப்படவில்லை. 80,000 மருத்துவ முதுநிலை மருத்துவ பட்டதாரிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த தாமதம் ஏன்? மருத்துவ மாணவர்களை பாதிக்கும் இந்த தாமதத்தை ஏற்று கொள்ள முடியாது” என பதிவிட்டுள்ளார்.
* மணிப்பூர் மக்களை அவமானப்படுத்தும் செயல் – ஜெய்ராம் ரமேஷ்
பிரதமர் மோடியின் மொரிஷீயஸ் பயணம் பற்றி ஜெய்ராம் ரமேஷ் கடுமையாக விமர்சித்துள்ளார். அவர் தன் எக்ஸ் பதிவில், “பிரதமர் மோடிக்கு இப்போது அடிக்கடி விமான பயணம் செல்லும் நேரம். தற்போது அவர் மொரிஷீயஸ் செல்கிறார். ஆனால் மணிப்பூரில் குடியரசு தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்ட பிறகும் நிலைமை பதற்றமாகவே உள்ளது.
இனக்கலவரத்தால் பாதிக்கப்பட்ட மணிப்பூர் மக்கள் பிரதமரின் வருகைக்காக தொடர்ந்து காத்திருக்கின்றனர். ஆனால் இரண்டு ஆண்டுகளாக பிரதமர் மோடி மணிப்பூர் செல்ல மறுப்பது அம்மாநில மக்களை அவமானப்படுத்தும் செயல்” என கடுமையாக விமர்சித்துள்ளார்.
The post நீட் பிஜி மாணவர் சேர்க்கையில் தாமதம் ஏன்? காங். கேள்வி appeared first on Dinakaran.