காத்மண்ட்: நேபாளத்தில் அடுத்தடுத்து மூன்று முறை நிலநடுக்கம் ஏற்பட்டதால் பதற்றமான சூழல் நிலவியது. மேற்கு நேபாளத்தில் நேற்று அதிகாலை 3.14மணிக்கு மியாக்டி மாவட்டத்தில் நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.0புள்ளிகளாக பதிவானது. இதனை தொடர்ந்து காத்மண்டில் இருந்து சுமார் 300கி.மீ. தொலைவில் உள்ள பாக்லுங் மாவட்டத்தில் உள்ள குகானியை மையமாக கொண்டு நிலநடுக்கம் ஏற்பட்டது.
காலை 6.20மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.1புள்ளிகளாக பதிவானதாக தேசிய நிலநடுக்க கண்காணிப்பு மற்றும் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தால் சேதம் ஏற்பட்டதாக எந்த தகவலும் இல்லை. இதனை தொடர்ந்து பிற்பகல் 2.35மணியளவில் திபெத்தின் டிக்கி கவுண்டியில் நிலநடுக்கம் உணரப்பட்டது. இதனால் பொதுமக்கள் அச்சமடைந்து வீடுகளை விட்டு வெளியே திரண்டனர். இதன் காரணமாக சற்று நேரம் பதற்றமான சூழல் நிலவியது. இந்த நிலநடுக்கம் 5.9ரிக்டராக பதிவாகி இருந்தது.
The post நேபாளத்தில் அடுத்தடுத்து மூன்று முறை நிலநடுக்கம் appeared first on Dinakaran.