இந்தியாவிலேயே முதல்முறையாக மலிவு விலையில் உணவு வழங்கும் 'அம்மா உணவகம்' திட்டத்தை முதல்வராக இருந்த ஜெயலலிதா கடந்த 2012-ல் தமிழகத்தில் தொடங்கினார். முதலில் சென்னையில் தான் அத்திட்டம் தொடங்கப்பட்டது. பின்னர் அவரது ஆட்சி காலத்தில் சென்னை முழுவதும் 407 அம்மா உணவகங்கள் திறக்கப்பட்டன.
மாநிலம் முழுவதும் பிற மாநகராட்சி பகுதிகளில் 108, நகராட்சிகளில் 139, ஊரகப் பகுதிகளில் 4 என மொத்தம் 658 அம்மா உணவகங்களை ஜெயலலிதா தொடங்கினார். தமிழகம் முழுவதும் இன்றும் 4 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தினமும் பயன்பெற்று வருகின்றனர்.