டெல்லி: பஞ்சாபில் உள்ள விமானப் படை தளத்தில் நடத்த முயன்ற தாக்குதல் முறியடிக்கப்பட்டதாக கர்னல் சோபியா குரேஷி விளக்கம் அளித்துள்ளார். வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி, கர்னல் சோபியா குரேஷி கூட்டாக பேட்டி அளித்து வருகின்றனர். விமானப்படை தளங்கள் மட்டுமின்றி குடியிருப்பு பகுதிகளிலும் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளது. 26 இடங்களில் ராணுவ தளங்களை குறி வைத்து பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது. பதிலடி நடவடிக்கையாக பாகிஸ்தான் ராணுவ தளங்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தியது. பதிலடி நடவடிக்கையாக பாகிஸ்தானில் உள்ள சியால்கோட் விமானப்படை தளத்தை இந்தியா தாக்கியது. பயணிகள் விமானங்களை கேடயமாக பயன்படுத்தி பாக். வான்வழி தாக்குதலை மேற்கொள்கிறது.
The post பஞ்சாபில் உள்ள விமானப் படை தளத்தில் நடத்த முயன்ற தாக்குதல் முறியடிப்பு: சோபியா குரேஷி விளக்கம் appeared first on Dinakaran.