சண்டிகர்: பஞ்சாப்பில் ஆளுங்கட்சியான ஆம் ஆத்மியை சேர்ந்த பெண் எம்எல்ஏ அன்மோல் ககன்மான் தனது பதவியை திடீரென ராஜினாமா செய்துள்ளார். கரார் தொகுதி எம்எல்ஏவான இவர் தனது ராஜினாமா கடிதத்தை சட்டப்பேரவை சபாநாயகர் குல்தார் சிங்கிற்கு அனுப்பி வைத்துள்ளார். பாடகராக இருந்து அரசியலுக்கு வந்த அன்மோல் 2022ல் கரார் தொகுதியில் வென்று எம்எல்ஏ ஆனார். சுற்றுலா மற்றும் கலாச்சாரம், முதலீடு ஊக்குவிப்பு, தொழிலாளர் நலன் துறையின் அமைச்சராக இருந்தார்.
The post பஞ்சாப்பில் ஆம் ஆத்மி எம்எல்ஏ திடீர் ராஜினாமா appeared first on Dinakaran.