பாகிஸ்தானில் கடந்த காலங்களில் ஆட்சி செய்த பல்வேறு அரசாங்கங்கள், தங்கம் உள்ளிட்ட விலைமதிப்பற்ற உலோகங்கள் கிடைப்பதாகக் கூறியுள்ளன.
2015 ஆம் ஆண்டில், அப்போதைய பிரதமர் நவாஸ் ஷெரீப், பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தின் சினியோட் நகரில் இரும்பு, தாமிரம் மற்றும் தங்கத்தின் பெரிய இருப்புக்களைக் கண்டுபிடித்ததாக அறிவித்தார்.