பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் சென்ற ரயில் கடத்தப்பட்டுள்ளது. ரயிலில் சென்ற தீவிரவாத தடுப்புப் படை, உளவுத்துறை உள்ளிட்டோரும் சிறைபிடிக்கப்பட்டுள்ளார். பாகிஸ்தானில் ராணுவ வீரர்கள் சென்ற ஜாஃபர் விரைவு ரயிலைக் கடத்திய பலோச் விடுதலை படை. கடத்தலின்போது வெடித்த மோதலில் 6 ராணுவ வீரர்கள் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளனர். பெண்கள், குழந்தைகளை விடுவித்து, 100க்கும் மேற்பட்டோருடன் ரயிலை கடத்தியுள்ளனர். ரயிலை மீட்க ராணுவ நடவடிக்கையில் ஈடுபட்டால் அனைவரும் கொல்லப்படுவர் எனவும் மிரட்டல் விடுத்துள்ளனர்.
பாகிஸ்தானில் பாதுகாப்படை படையினர் சென்ற ரயிலை கிளர்ச்சி குழு கடத்தியுள்ளது. 300 பயணிகளை விடுதலை செய்தபோதும், 100 பேரை பிணைக்கைதிகளாக பிடித்து வைத்துள்ளதாக கிளர்ச்சி குழுவினர் தெரிவித்துள்ளனர். மேலும் பாதுகாப்படை வீரர்கள் 6 பேரை அவர்கள் சுட்டு கொன்றுவிட்டதாகவும் கூறப்படுகிறது. பாகிஸ்தானில் குவெட்டாவிலிருந்து பெஷாவருக்கு ரயில் சென்று கொண்டிருந்த ரயிலில் பாதுகாப்படை படையினர் பயணம் செய்தனா். அப்போது அந்த ரயிலை பலோச் விடுதலைப் படை (BLA) ஜாஃபர் எக்ஸ்பிரஸைக் கடத்தியுள்ளனர்.
ரயில் கடத்தல் சம்பவத்துக்கு பொறுப்பேற்று பலோச் விடுதலை ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில், போலன் மாவட்டத்தின் மஷ்காப், தாதர் பகுதிகளுக்கு இடையே நடத்தப்பட்ட இந்த சம்பவம் திட்டமிடப்பட்ட செயல்பாடு ஆகும். எங்கள் சுதந்திரப் போராட்ட வீரர்கள், ரயில் பாதையை வெடி வைத்து தகர்த்து, ரயிலை நிறுத்தச் செய்தனர். 100 பேர் பிணைக்கைதிகளாக பிடிக்கப்பட்டுள்ளனர். ராணுவ நடவடிக்கை எடுத்தால் அனைவரும் கொல்லப்படுவார்கள்” என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
The post பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் சென்ற ரயில் கடத்தல்; நடவடிக்கை எடுத்தால் அனைவரும் கொல்லப்படுவர் என எச்சரிக்கை! appeared first on Dinakaran.