லாகூர்: பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் 2 சீக்கியர் உள்பட 10 தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் நாட்டில் உள்ள பஞ்சாப் காவல்துறையின் பயங்கரவாத எதிர்ப்புத் துறையின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், ‘பஞ்சாப் மாகாணத்தில் பல்வேறு பகுதிகளில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் போது 10 தீவிரவாதிகளை கைது செய்ததன் மூலம் ஒரு பெரிய பயங்கரவாத திட்டத்தை முறியடித்துள்ளது. கைது செய்யப்பட்ட தீவிரவாதிகளில் இரண்டு பேர் பாகிஸ்தான் சீக்கியர்கள். அவர்கள் பெயர் சூரஜ் சிங் மற்றும் பாதல் சிங். இருவரும் ராவல்பிண்டியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்கள் பஞ்சாப் மாகாணத்தின் நங்கனா சாஹிப் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். இவர்கள் சிந்து மாகாணத்தை பாகிஸ்தானில் இருந்து பிரிக்க போராடும் பிரிவினைவாத அரசியல் கட்சியான ஜெய் சிந்த் முத்தஹிதா மஹாஸின் தீவிர உறுப்பினர்கள். பிடிபட்ட 10 தீவிரவாதிகளிடம் இருந்து ஆயுதங்கள், வெடிபொருட்கள் மற்றும் பிற தடைசெய்யப்பட்ட பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. ராவல்பிண்டி மற்றும் பஞ்சாபின் பிற நகரங்களில் உள்ள முக்கியமான கட்டிடங்களை தகர்க்க தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளனர். அவர்கள் மீது ஒன்பது தனித்தனி வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன’ என்றார்.
The post பாக்.கில் 2 சீக்கியர் உட்பட 10 தீவிரவாதிகள் கைது appeared first on Dinakaran.