கிராமங்களில் தானியங்களை அளப்பதற்கு இரும்பாலான உழக்கு, நாழி, மரக்கால் படியை பயன்படுத்துவார்கள். இதை அளப்பதற்கு கிராமத்துக்கு ஒருவர் இருப்பார். அவரை ‘அளவைக்காரர்’ என்று அழைப்பார்கள். அவருக்கு அளவைக் கூலியாக நெல் மற்றும் தானியங்கள் கொடுப்பார்கள். சிலர் பழக்கத்தின் பேரில் கூலி எதுவும் வாங்காமலேயே அளந்து கொடுப்பதும் உண்டு.
எட்டையபுரம் பகுதியில் மரக்காலில் நெல்லையோ தானியத்தையே அளக்கும்போது மரக்கால் ஒன்று என்று ஆரம்பிப்பார்கள். அடுத்து இரண்டு… மூன்று… என்று தொடங்கி, எட்டு வரும்போது, எட்டு என்று கூற மாட்டார்கள். ஏனென்றால் ‘எட்டு – எட்டப்பன்’ என்று வருவதால் அதைத் தவிர்த்து, எட்டாவது மரக்காலை ‘மகாராஜா மரக்கால்’ என்பார்கள். இது அங்கு வாடிக்கையாக இருந்தது. பருத்தியை சதுர வடிவில் தாட்டு என்று கூறப்படும் 100 கிலோ அளவிலான சாக்கில் அடைத்து எடை போடுவார்கள். மிளகாய் வத்தலையும் இதேபோல்தான் எடை போடுவார்கள்.