புதுடெல்லி: கொரோனா பெருந்தொற்று போன்றவற்றால் உருவான அவசர நிலை அல்லது பேரிடர் சூழலை கையாள்வதை நோக்கமாகக் கொண்டு, ‘பிரதமரின் மக்கள் உதவி மற்றும் அவசரகால நிவாரண நிதியம்’ (பிஎம் கேர்ஸ் நிதியம்)2020ல் உருவாக்கப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் வரும் மாணவர்களுக்கு நிதியுதவி அளிக்கப்பட்டது. தற்போது திட்டத்தின் கீழ் தகுதி பெற்ற மாணவர்கள், தலித்துகள், இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவை சேர்ந்த மாணவர்கள் யுபிஎஸ்சி, மாநில தேர்வாணையங்கள்,வங்கிகள், இன்சூரன்ஸ் நிறுவனங்கள் மற்றும் பொது துறை நிறுவனங்களில் அதிகாரிகள் அந்தஸ்திலான பதவிகளுக்கான தேர்வுகளுக்கு இலவச பயற்சி அளிக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.
இதை தவிர,ஐஐடி-ஜேஇஇ, நீட் உள்ளிட்ட தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்கப்படும். மேலும், பாதுகாப்பு துறை(என்டிஏ), ஒருங்கிணைந்த பாதுகாப்பு துறை தேர்வுகளை எழுதும் மாணவர்களும் திட்டத்தில் பயன்பெறுவார்கள். ஆண்டுதோறும் பயிற்சிக்கு 3,500 மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.70 சதவீத இடங்கள் தலித்துகளுக்கும், 30 சதவீதம் இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு ஒதுக்கப்படும்.இதில்,ஒவ்வொரு பிரிவிலும் 30 சதவீத இடங்கள் மாணவிகளுக்கு ஒதுக்கப்படும். இதில் ஆன்லைன் மூலம் மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என வழிகாட்டு நெறிமுறைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
The post பிஎம் கேர்ஸ் நிதி மூலம் போட்டி தேர்வுக்கு இலவச பயிற்சி appeared first on Dinakaran.