பாட்னா: பீகார் தலைநகர் பாட்னாவில் நேற்று முன்தினம் காலையில் குடியரசு தின விழா நடந்தது. இதில் ஆளுநர் ஆரிப் முகமது கான், முதல்வர் நிதிஷ்குமார் கலந்து கொண்டனர். குடியரசு தினத்தையொட்டி ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்து நிகழ்ச்சி மாலையில் நடந்தது. தேநீர் விருந்தில் முதல்வர் நிதிஷ்குமார் பங்கேற்காமல் புறக்கணித்தது. முதல்வரின் வீட்டுக்கு அருகேதான் ஆளுநர் மாளிகை அமைந்துள்ளது. அந்த நிகழ்ச்சியில் நிதிஷ் குமார் பங்கேற்காததது பீகார் அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்தன்று தலித் குடியிருப்பு அவர் விஜயம் செய்வார். இந்த ஆண்டு தலித் பகுதிக்கும் அவர் செல்லவில்லை. இதுகுறித்து முதல்வருக்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறுகையில், முதல்வர் நிதிஷ்குமார் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. அப்படி இருந்தபோதிலும் காலையில் குடியரசு தின விழாவில் கலந்து கொண்டார்.சில நாட்கள் ஓய்வெடுத்த பிறகு தன்னுடைய வழக்கமான பணிகளை மேற்கொள்வார் என்றன.
The post பீகார் அரசியலில் பரபரப்பு ஆளுநர் அளித்த தேநீர் விருந்து நிதிஷ் குமார் புறக்கணிப்பு appeared first on Dinakaran.