உடுமலை : புலிகள் கணக்கெடுப்பு பணிக்காக உடுமலை, அமராவதி வனச்சரகங்களில் கேமரா பொருத்தும் பணிகள் நடக்கின்றன. ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட 8 வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பு பணிக்காக கேமரா பொருத்தும் பணி துவங்கி உள்ளது. அதன்படி, திருப்பூர் வனக்கோட்டத்தில் உள்ள அமராவதி, உடுமலை வனச்சரகங்களில் 200 கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன.
மொத்தம் 133 சுற்றுகளாக பிரிக்கப்பட்டு பணி நடக்கிறது. அமராவதி வனச்சரகத்தில் புலிப்பாறு, வாண்டன், திருமூர்த்திமலை, குருமலை, ஆட்டுமலை, கோடந்தூர் உள்ளிட்ட இடங்களிலும், உடுமலை வனச்சரகத்தில் தளிஞ்சி, தளிஞ்சிவயல், கரட்டுபதி, சிராவயல், தூவானம் உள்ளிட்ட இடங்களிலும் ஒரே நேர்கோட்டு பாதையில் கேமரா பொருத்தும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
The post புலிகள் கணக்கெடுப்பு பணிக்காக உடுமலை, அமராவதி வனச்சரகங்களில் கேமரா பொருத்தும் பணி தீவிரம் appeared first on Dinakaran.