தாம்பரம்: சிறைவாசிகள் போலீஸ் பக்ருதீன், இஸ்மாயில், பிலால் மாலிக் உள்ளிட்ட சகோதரர்கள் புழல் சிறையில் சிறை அதிகாரிகளால் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டத்தை கண்டித்து சென்னையில் ஜன.24 அன்று மனித நேய மக்கள் கட்சி சார்பாக ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தமுமுக மற்றும் மனிதநேய மக்கள் கட்சி செங்கல்பட்டு வடக்கு மாவட்ட தலைவர் எஸ்.கே.ஜாகிர் உசேன் தலைமையில் தாம்பரத்தில் இன்று (ஜன.18) நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக மாநில துணை பொதுச் செயலாளர் யாக்கூப் கலந்து கொண்டு நிர்வாகிகளுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.