பெங்களூரு: பெங்களூருவில் போக்குவரத்து விதிகளை 311 முறை மீறியதற்காக இருசக்கர வாகன ஓட்டி ஒருவர் ரூ.1.6 லட்சம் அபராதம் செலுத்தியுள்ளார். பெங்களூருவில் போக்குவரத்து விதிகளை மீறுபவர்களுக்கு அபராதம் விதிப்பதுடன், நிலுவை அபராத தொகைகளையும் போக்குவரத்து போலீசார் கண்டிப்புடன் வசூலித்து வருகின்றனர். அந்தவகையில், ஒரு நபர் ரூ.1.6 லட்சத்தை அபராதமாக செலுத்தியுள்ளார். இருசக்கர வாகன ஓட்டி ஒருவர் போக்குவரத்து விதிகளை மீறுவதையே வாடிக்கையாக வைத்துள்ளார். 311 முறை விதிகளை மீறி பைக் ஓட்டியுள்ளார்.
சிட்டி மார்க்கெட் டிராபிக் போலீஸ் கடந்த 3ம் தேதி அந்த நபரை பிடித்து பைக்கை பறிமுதல் செய்தனர். இதுவரை விதிகளை மீறியதற்கான மொத்த அபராதத்தொகையையும் செலுத்திவிட்டு பைக்கை பெற்றுக்கொள்ளுமாறு கூறிவிட்டனர். அவரது அபராத சலானை பிரின்ட் எடுத்தபோது 20 மீட்டருக்கு பிரின்ட் வந்ததாக போக்குவரத்து போலீசார் கூறியிருக்கின்றனர். இதையடுத்து 311 முறை சாலை விதிகளை மீறியதற்காக மொத்தம் ரூ.1.6 லட்சத்தை அபராதமாக செலுத்திவிட்டு அந்த நபர் பைக்கை எடுத்துச்சென்றார். இந்த தகவலை டிராபிக் போலீஸ் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளனர்.
The post பெங்களூருவில் 311 முறை சாலை விதி மீறியவரிடம் ரூ.1.6 லட்சம் அபராதம் வசூல் appeared first on Dinakaran.