பெலகாவி: கர்நாடக சட்டமேலவையின் குளிர் கால கூட்டத் தொடர் பெலகாவியில் உள்ள சுவர்ண சவுதாவில் நடைபெறுகிறது. இந்நிலையில் நேற்று மேலவை ஒத்திவைக்கப்பட்ட பிறகு உறுப்பினர்கள் வெளியே வந்து கொண்டிருந்தனர். அப்போது பாஜ மூத்த தலைவரும் எம்.எல்.சியுமான சி.டி.ரவி, பெண் அமைச்சர் லட்சுமி ஹெப்பாள்கரை இழிவாக பேசி அவதூறு செய்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து மதியம் 1 மணிக்கு அமைச்சர் லட்சுமி ஹெப்பள்கர் ஹிரேபாகேவாடி போலீசில் சி.டி.ரவி மீது புகார் அளித்தார்.
இதையடுத்து போலீசார் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 75 மற்றும் 79ன் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். அமைச்சர் அளித்த புகாரில், ‘சி.டி. ரவி என்னை நோக்கி, அந்த இழிவான வார்த்தையை 10 முறை பயன்படுத்தினார். ஆபாசமான சைகைகள் செய்து கண்ணியத்தை கெடுத்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து போலீசார், சுவர்ண சவுதாவில் உள்ளிருப்புப் போராட்டத்தில் அமர்ந்திருந்த சி.டி.ரவியை கைது செய்து குண்டு கட்டாக தூக்கிச் சென்றனர். ஹிரேபாகேவாடி காவல் நிலையத்தில் அவரிடம் விசாரணை நடந்தது.
The post பெண் அமைச்சரை இழிவாக பேசிய கர்நாடக பாஜ தலைவர் சி.டி.ரவி கைது appeared first on Dinakaran.