கெய்ரோ: ஹமாஸ் தரப்பில் இருந்து 3 பணயக்கைதிகள் விடுவிக்கப்பட்ட 7 மணிநேரத்தில் சுமார் 90 பாலஸ்தீனியர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். காசாவில் கடந்த 15 மாதங்களாக நடக்கும் இஸ்ரேல்-ஹமாஸ் போரால் 46,000க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் பலியாகி உள்ளனர். இஸ்ரேல், ஹமாசுடன் நடந்த பேச்சுவார்த்தையில் முதல்கட்டமாக 6 வார கால போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து நேற்று பிற்பகல் போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது. இதனை தொடர்ந்து 3 பணயக்கைதிகள் ஹமாஸ் தரப்பில் இருந்து விடுவிக்கப்பட்டனர். இதனை தொடர்ந்து சுமார் 7 மணிநேரத்துக்கு பின் நேற்று 90 பாலஸ்தீன கைதிகளை இஸ்ரேல் விடுவித்தது. மேற்கு ரமல்லா நகருக்கு வெளியே ஏராளமான கைதிகளை ஏற்றிக்கொண்டு பேருந்து ஒன்று சென்றது. இதில் இருந்த அனைவரும் பெண்கள் மற்றும் சிறார்கள்.
ஹவுதி அறிவிப்பு: இஸ்ரேல் -ஹமாஸ் போர் தொடங்கிய பின்னர் பாலஸ்தீனியர்களுக்காக ஒற்றுமையை கூறி சுமார் 100க்கும் மேற்பட்ட வணிக கப்பல்களை ஹவுதிகள் டிரோன்கள் மற்றும் ஏவுகணைகள் மூலமாக குறிவைத்து தாக்கியுள்ளனர். இந்நிலையில் காசாவில் போர் நிறுத்தம் அமலுக்கு வந்துள்ளதால் செங்கடல் பகுதியில் கப்பல்கள் மீதான தாக்குதல்கள் கட்டுப்படுத்தப்படும் என்று ஹவுதி அமைப்பு அறிவித்துள்ளது. இது குறித்து கப்பலில் ஏற்றுமதி செய்பவர்களுக்கு ஹமாஸ் அமைப்பு சார்பில் மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது.
The post போர் நிறுத்தம் அமல் எதிரொலி 90 பாலஸ்தீனியர்கள் விடுவிப்பு appeared first on Dinakaran.