மகாகும்ப் நகர்: உத்தரப்பிரதேசத்தில் நடந்து வரும் மகா கும்பமேளாவில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தனது அமைச்சர்களுடன் நேற்று புனித நீராடினார். உத்தரப்பிரதேசத்தில் மகா கும்பமேளா தொடங்கி நடந்து வருகின்றது. நாள்தோறும் பல லட்சம் பக்தர்கள் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி வருகின்றனர். இந்நிலையில் முதல்வர் யோகி ஆதித்யநாத் நேற்று திரிவேணி சங்கமத்தில் நீராடினார். இதற்காக முதல்வர் தனது அமைச்சர்களுடன் மகாகும்ப் நகருக்கு வந்திருந்தார். முன்னதாக அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அரசின் கொள்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. பின்னர் முதல்வர் தனது அமைச்சர்களுடன் சேர்ந்து புனித நீராடினார். ஒருவருக்கொருவர் நீரை அள்ளித்தெளித்துகொண்டு மகிழ்ந்தனர். ராமர் கோயில் கும்பாபிஷேகத்தின் முதலாமாண்டு நிறைவை குறிக்கும் நாளில் அமைச்சரவை கூட்டமும் புனித நீராடுதலும் நடைபெற்றது.
The post மகா கும்பமேளாவில் புனித நீராடிய முதல்வர் யோகி, அமைச்சர்கள் appeared first on Dinakaran.