ஆந்திரா: மகா சிவராத்திரியை ஒட்டி ஆந்திராவில் இரு வேறு இடங்களில் ஆற்றில் குளித்த 7 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். மகாசிவராத்திரியான இன்று ஆந்திர மாநிலத்தில் காலை கிழக்குகோதாவரி மாவட்டத்தில் உள்ள தல்லாபுடி மண்டலத்தில் உள்ள தடிபுடி கிராமத்தில், குளிக்கச் சென்ற 5 இளைஞர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
மகாசிவராத்திரி விழாவிற்கு குளித்த பிறகு அருகிலுள்ள சிவன் கோவிலுக்குச் செல்ல 11 இளைஞர்கள் கோதாவரி ஆற்றில் குளிக்கச் சென்றுள்ளனர். அப்போது எதிர்பார்த்த விதமாக 5 இளைஞர்கள் ஆற்றில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
11 இளைஞர்களில், 5 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில் 6 பேர் உயிர் பிழைத்தனர். நீரில் மூழ்கி உயிரிழந்தவர்கள் அனைவரும் 20 வயதுக்குட்பட்டவர்கள் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இறந்தவர்களின் உடல்களைத் தேடும் பணியில் காவல்துறையினர், தீயணைப்பு வீரர்கள் மற்றும் உள்ளூர்வாசிகள் ஈடுபட்டுள்ளனர்.
இதே போன்று ஆந்திர மாநிலத்தில் ஸ்ரீசைலம் மலைக்கு கீழ் உள்ள கிருஷ்ணா நதியில் குளித்த தந்தை, மகன் ஆகியோர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். மகாசிவராத்திரியான இன்று நதி, ஆற்றில் குளிக்க சென்ற 7 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
The post மகா சிவராத்திரியை ஒட்டி ஆந்திராவில் இரு வேறு இடங்களில் ஆற்றில் குளித்த 7 பேர் நீரில் மூழ்கி உயிரிழப்பு appeared first on Dinakaran.