புதுடெல்லி: பிஹார் மாநிலம் புத்த கயாவில் அமைந்துள்ளது மகா போதி கோயில். புத்தருக்கு ஞானம் பிறந்த போதி மரம் இதற்குள் உள்ளது. இக்கோயிலை நிர்வகிக்க, மகா போதி கோயில் சட்டம் 1949 (பிஜிடிஏ)-ஐ பிஹார் மாநில அரசு இயற்றியது. இச்சட்டத்தின்படி, மகா போதி கோயிலின் நிர்வாக குழுவில் பவுத்தர்கள் மற்றும் இந்துக்கள் தலா 4 பேரை பிஹார் அரசு நியமிக்கிறது.
இக்குழுவின் நிரந்தர தலைவராக புத்த கயா மாவட்ட ஆட்சியர் இருப்பார். இந்நிலையில், கோயில் நிர்வாக குழுவில் இந்துக்கள் இருக்க கூடாது. முழு அதிகாரமும் தங்களுக்கே அளிக்க வேண்டும் என நீண்ட காலமாக பவுத்தர்கள் கோரி வருகின்றனர்.