லாத்தூர்: மகாராஷ்டிரா மாநிலம் லாத்தூர் மாவட்டம், உத்கிர் நகரின் பல இடங்களில் காகங்கள் உயிரிழந்து கிடப்பதாக புகார்கள் வந்தன. நேற்று முன்தினம் வரை மொத்தம் 51 காகங்கள் உயிரிழந்துள்ளன. இதை தொடர்ந்து இறந்து கிடந்த காகங்களை கால்நடை துறை அதிகாரிகள் ஆய்வகத்துக்கு அனுப்பி வைத்தனர். தற்போது வெளியான ஆய்வு அறிக்கையில் பறவை காய்ச்சலினால் காகங்கள் இறந்துள்ளன என்பது தெரியவந்துள்ளதாக மாநில கால்நடை துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
The post மகாராஷ்ராவில் பறவை காய்ச்சல் appeared first on Dinakaran.