ஜம்மு:ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா நேற்று நிருபர்களிடம் கூறுகையில்,‘‘டெல்லி பேரவை தேர்தலில் மும்முனை போட்டி ஏற்பட்டது குறித்து கருத்து கூறுவதற்கு ஒன்றும் இல்லை. ஏனெனில் டெல்லி தேர்தலில் எங்கள் கட்சியின் பங்களிப்பு எதுவும் இல்லை. துரதிர்ஷ்டவசமாக இந்தியா கூட்டணி கூட்டம் நடக்கவில்லை.
இதில் யார் இருக்கிறார்கள், தலைமை பொறுப்பு யாருக்கு, கொள்கை உள்ளிட்டவை தெளிவில்லாமல் உள்ளன. ஒரு வேளை மக்களவை தேர்தலுக்கு மட்டும் தான் கூட்டணி அமைக்கப்பட்டால் நாம் வெளியேறி கொள்ள வேண்டியது தான். டெல்லி தேர்தலுக்கு பின்னர் கூட்டணியின் கூட்டம் நடத்தப்பட வேண்டும்.அப்போது இதில் தெளிவான முடிவு கிடைக்கும்’’ என்றார்.
The post மக்களவை தேர்தலுக்காக மட்டும் என்றால் இந்தியா கூட்டணியில் இருந்து வெளியேறுவேன்: உமர் அப்துல்லா பேட்டி appeared first on Dinakaran.