நெல்லை: மங்களூரு அருகே கூட்டுறவு வங்கியில் ரூ.10 கோடி மதிப்பிலான தங்க நகைகள் கொள்ளை வழக்கில், நெல்லையில் பதுங்கி இருந்த 3 பேரை கர்நாடகா போலீசார் கைது செய்து அழைத்துச் சென்ற நிலையில், போலீசாரை தாக்கி தப்ப முயன்ற ஒருவர் சுட்டுப் பிடிக்கப்பட்டார். கொள்ளை நடந்த இடத்திற்கு அழைத்துச் சென்று விசாரிக்கும் போது அங்கு கிடந்த பீர் பாட்டிலால் போலீசாரை தாக்கி தப்ப முயன்ற கண்ணன் மணி என்பவர் சுட்டுப் பிடிக்கப்பட்டார். 3 போலீசார் இதில் காயம் அடைந்தனர். மங்களூருவில் 3 நாட்களுக்கு முன்பு வேளாண் கூட்டுறவு வங்கியில் நுழைந்து ரூ.10 கோடி மதிப்பிலான தங்கம் கொள்ளையடிக்கப்பட்டது. 6 பேர் கொண்ட கொள்ளை கும்பல் கூட்டுறவு வங்கிக்குள் நுழைந்து தங்கத்தை கொள்ளையடித்துவிட்டு தப்பியது.
The post மங்களூருவில் கூட்டுறவு வங்கி கொள்ளை வழக்கில் கொள்ளையர்களை சுட்டுப் பிடித்தது போலீஸ் appeared first on Dinakaran.