புதுடெல்லி: பஹல்காம் தாக்குதலில் மணிசங்கர் ஐயரின் கருத்துகள் தீவிரவாத சூழலை காங்கிரஸ் இன்னும் பாதுகாத்து வருகிறது என்பதை உணர்த்துகிறது என பாஜ குற்றம் சாட்டியுள்ளது.
மூத்த காங்கிரஸ் தலைவர் மணிசங்கர் ஐயர் நேற்று முன்தினம் புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது,பஹல்காம் தாக்குதல் பற்றி பேசிய மணிசங்கர்,1947ல் இந்தியாவின் பிரிவினைக்கு வழிவகுத்த பிளவுகள் இன்றும் விளைவுகளை ஏற்படுத்துகின்றன என்பதை குறிக்கிறது. பிரிவினையின் தீர்க்கப்படாத கேள்விகள் ஏப்.22ல் பஹல்காமில் நடந்த பயங்கரமான சோகத்தில் பிரதிபலிக்கிறதா. காந்தி,நேரு,ஜின்னா மற்றும் பிற தலைவர்களிடையேயான வேறுபாடுகள் பிரிவினைக்கு வழிவகுத்தன. இந்தியாவில் உள்ள முஸ்லிம்கள் ஏற்று கொள்ளப்பட்டவர்களாகவும், போற்றப்பட்டவர்களாகவும் உணர்கிறார்களா என்று கேள்வி எழுப்பினார்.
இந்நிலையில்,பாஜ செய்தி தொடர்பாளர் பிரதீப் பண்டாரி கூறுகையில்,‘‘ ராபர்ட் வதேரா, சித்தராமையாவுக்கு பிறகு,தற்போது மணிசங்கர் ஐயர் தீவிரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தானையும்,தீவிரவாதிகளையும் குற்றம் சாட்டமறுக்கின்றனர். 2008ம் ஆண்டு மும்பை தாக்குதலுக்கு பிறகு காங்கிரஸ் கட்சியில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. அந்த கட்சி தீவிரவாத சூழலை இன்னும் பாதுகாத்து வருவதும், பாகிஸ்தான் மீது அன்பு செலுத்துவதும் இது உணர்த்துகிறது’’ என்று தெரிவித்தார்.
The post மணிசங்கர் ஐயர் பேச்சுக்கு பதிலடி; தீவிரவாத சூழலை பாதுகாக்கிறது; காங். மீது பாஜ குற்றச்சாட்டு appeared first on Dinakaran.