மத்திய பட்ஜெட்டில் முதியோர் நலனுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என 'ஏஜ்வெல் பவுன்டேஷன்' என்ற தன்னார்வ அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு அந்த அமைப்பு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: நாட்டின் மக்கள் தொகையில் 32 கோடிக்கும் மேற்பட்டோர் (சுமார் 20 சதவீதம் பேர்) 60 வயதுக்கு மேற்பட்டவர்கள். இவர்கள் கண்ணியமாகவும் நலமுடனும் வாழ்வதை உறுதி செய்திட சுகாதாரப் பராமரிப்பு, நிதிப் பாதுகாப்பு மற்றும் சமூக ஆதரவு அமைப்புகளில் உடனடி மற்றும் வலுவான கொள்கை சீர்திருத்தங்கள் செய்திட வேண்டும். முதியோரை பராமரிக்கும் குடும்ப உறுப்பினர்களுக்கு சிறப்பு வருமான வரி விலக்கு அளிக்க வேண்டும். மூத்த குடிமக்கள் பாதயாத்திரை செல்ல நிதியுதவி, மருத்துவ உபகரணங்கள் வாங்குவதற்கு தள்ளுபடி அட்டை வழங்க வேண்டும்.