மகாகும்ப் நகர்: உத்தரப்பிரதேசத்தில் கடந்த 13ம் தேதி மகா கும்பமேளா தொடங்கியது. நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி வருகின்றார்கள். இந்நிலையில் மவுனி அமாவாசையையொட்டி இன்று சுமார் 10 கோடி பேர் திரிவேணி சங்கமத்தில் அமிர்த ஸ்நானம் செய்வதற்கு குவிவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்காக அரசு பல்வேறு ஏற்பாடுகளை செய்துள்ளது. இன்று காலை 6.45மணிக்கு ஹெலிகாப்டர்களில் இருந்து மலர்கள் தூவ அரசு ஏற்பாடு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மவுனி அமாவாசை துறவிகளின் அமாவாசை என்றும் அழைக்கப்படுகின்றது. மவுனி அமாவாசையன்று நடைபெறும் குளியல் பாரம்பரியமாக மவுனமாகவே செய்யப்படுகின்றது.
* கும்பமேளா ரயில் மீது கல்வீச்சு
மத்தியப்பிரதேசத்தின் சத்தர்பூர் மாவட்டத்தில் உள்ள சத்தர்பூர் மற்றும் ஹர்பால்பூர் ஆகிய இரண்டு ரயில் நிலையங்களில் மகா கும்பமேளாவுக்கு சென்ற ரயிலில் இடம் கிடைக்காததால் காத்திருந்த பயணிகள் கற்களை வீசி தாக்குதல் நடத்தினார்கள்.
The post மவுனி அமாவாசையான இன்று 10 கோடி பேர் அமிர்த ஸ்நானம் செய்ய வாய்ப்பு appeared first on Dinakaran.