கடையம்: தென்காசி மாவட்டம் கடையம் அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ தோரணமலை முருகன் கோவில் உள்ளது. இக்கோவிலில் மாசி மாதம் பௌர்ணமியை முன்னிட்டு இன்று சிறப்பு பூஜை நடைபெற்றது. முன்னதாக வருண கலச பூஜை நடைபெற்றது. இதனை முன்னிட்டு மலை மீது உள்ள சுனையிலிருந்து தீர்த்தம் எடுத்து வரப்பட்டு மலை அடிவாரத்தில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக தீபா
ராதனை நடைபெற்றது. தொடர்ந்து சுமார் 6.3 கிலோ மீட்டர் தூரம் தோரண மலையை சுற்றி பக்தர்கள் கிரிவலம் மேற்கொண்டனர்.
அதன்பின்பு கோவில் வளாகத்தில் கூட்டுப் பிரார்த்தனை நடைபெற்றது. அதில் தற்போது நடைபெறும் தேர்வுகளில் மாணவர்கள் வெற்றி பெறவும், விவசாயம் செழித்து வளரவும், உலக நன்மை வேண்டியும் பக்தர்கள் கூட்டுப் பிரார்த்தனையில் ஈடுபட்டனர். தொடர்ந்து தோரணமலை முருகன் கோவிலில் திருமணமான தம்பதிகள் திருமணம் ஆகாதவர்களுக்கு தங்களது கைகளால் ஆசிர்வதித்து மங்கள பிரசாதங்கள் வழங்கினர். திருமணம் ஆகாதவர்கள் தோரண மலையில் உள்ள பதிவேட்டில் தங்களது சுய விவரங்கள் குறித்து பதிவு செய்யப்பட்டு வருகிறது இதனை திருமணம் ஆகாதவர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு கோவில் நிர்வாகம் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டது. பங்கேற்ற அனைத்து பக்தர்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் செண்பகராமன் செய்திருந்தார்.
The post மாசி மாத பௌர்ணமியை முன்னிட்டு தோரணமலை முருகன் கோவிலில் கிரிவலம், கூட்டு பிரார்த்தனை appeared first on Dinakaran.