புதுடெல்லி: அதானி சர்ச்சையில் சிக்கிய மாதபியின் பதவிகாலம் முடிவதால், செபியின் புதிய தலைவராக துஹின் காந்தாவை நியமனம் செய்து ஒன்றிய அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இந்திய பங்குச் சந்தை வாரியத்தின் (செபி) தலைவராக மாதபி பூரி புச் பணியாற்றி வந்தார். அவரது பதவிக்காலம் இன்றுடன் முடிவடைகிறது. அதானி குழும பங்குகளில் முதலீடு செய்ததாக மாபி பூரி புச் சர்ச்சையில் சிக்கியது குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து செபியின் புதிய தலைவராக ஒன்றிய அரசின் நிதிச் செயலாளர் துஹின் காந்தா பாண்டேவை ஒன்றிய அரசு நியமித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. இவர் அடுத்த மூன்று ஆண்டுகள் அல்லது மறு உத்தரவு வரும் வரை இந்தப் பதவியில் இருப்பார் என்று ஒன்றிய அரசின் பணியாளர் மற்றும் பயிற்சித் துறை தெரிவித்துள்ளது. புதிய செபி தலைவராக நியமிக்கப்பட்டுள்ள துஹின் காந்தா பாண்டே, கடந்த 1987ம் ஆண்டு பேட்ச் ஒடிசா கேடர் ஐஏஎஸ் அதிகாரி. கடந்த பட்ஜெட்டில் வருமானவரி கட்டமைப்பை ரூ.12 லட்சம் வரை உயர்த்த மூல காரணமாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
The post மாதபிபூரி புச் பதவிக்காலம் முடிந்ததால் செபிக்கு புதிய தலைவர் நியமனம்: ஒன்றிய அரசு அறிவிப்பு appeared first on Dinakaran.