சிவகாசி: “ஃபெஞ்சல் புயல் நிவாரண நிதியாக தமிழகத்துக்கு முதற்கட்டமாக ரூ.945 கோடி நிதி ஒதுக்கீடு செய்த மத்திய அரசுக்கு நன்றி” என்று தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.
சிவகாசி மாநகராட்சி திருத்தங்கல் செங்குளம் கண்மாய் ஹட்சன் நிறுவனத்தின் சமூகப் பொறுப்பு நிதி மற்றும் சிவகாசி பசுமை மன்றம் இணைந்து சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. கண்மாய் சீரமைப்பு பணியை நிதி, பருவநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு சனிக்கிழமை காலை ஆய்வு செய்தார். அப்போது செய்தியாளர்களிடம் அமைச்சர் தங்கம் தென்னரசு கூறும்போது, “நீர்நிலைகளை செங்குளம் கண்மாயில் நீண்ட கால தேவையின் அடிப்படையில் நீர் சென்று வரும் வழி, கழிவுநீர் சுத்திகரிப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இது விருதுநகர் மாவட்டத்தில் பல நீர்நிலைகளை சீரமைப்பதற்கான முன்மாதிரியாக உள்ளது.