சென்னை: தமிழ்நாடு முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் 72வது பிறந்தநாளை முன்னிட்டு, திமுக மருத்துவ அணியின் சார்பில் நடந்த வலையொலிபரப்பு நிகழ்ச்சியில், ‘திராவிட மாடல் நாயகர் ஒரு வாழும் சாகப்தம்’ என்ற தலைப்பில் விளையாட்டு மேம்பாட்டு அணியின் செயலாளர் தயாநிதி மாறன் எம்பி பேசியதாவது: முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறிய வயது முதல் கழகப் பணியில் குறிப்பாக, தமிழ்நாடு முன்னேற வேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு பல்வேறு பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளார்.
பள்ளி செல்லும் சிறார்களுக்கு காலை உணவு திட்டத்தை இந்தியாவிலேயே சிறப்பாக நடைமுறைப்படுத்திய முதல் மாநிலம் தமிழ்நாடு மட்டும்தான். மகளிருக்கு உரிமைத் தொகை 1000 ரூபாய் கிட்டதிட்ட 1 கோடியே 16 லட்சம் தாய்மார்களுக்கு இன்று மாதம் அவரவர் வங்கி கணக்கிலே செலுத்துகிற திட்டத்தை சிறப்பான முறையில் செய்தார். இதை கிண்டலடித்த பா.ஜ. கூட அவர்கள் ஆட்சியைப் பிடித்துள்ள டெல்லிலேயே அதை பின்பற்றுகிறார்கள்.
இதுதான் எங்கள் தலைவர். அவரை நான் ஏன் வாழும் சகாப்தம் என்று சொல்கிறேன் என்றால், செய்த ஒவ்வொரு திட்டமும், ஏன் கொரோனா நேரத்திலே எந்த ஒரு எதிர்க்கட்சியாவது வெளியே வந்ததா, இல்லையே எந்த அரசியல்வாதியாவது வெளியே வந்தாரா, அப்போது பார்த்தீர்களேயானால் அவரே முன்நின்று ஒவ்வொரு பக்கமும் சென்று, கொரோனாவால் பாதிக்கப்பட்டார்களோ அவர்களின் சிகிச்சையை பற்றியும், கொரோனா வார்டுக்கு செல்ல அச்சம்படும் நேரத்திலே கூட, மருத்துவர்களே கொரோனா வார்டுக்கு செல்ல அச்சப்படும்போதும், நேராக மருத்துவமனைக்கு சென்று தமிழ்நாட்டு மக்கள் என் மக்கள் உங்களுக்காக நான் பாடுபடுவேன் என்று கொரோனாவில் இருந்து விடுபட இலவச தடுப்பூசிகளை வழங்கி இந்த தமிழகத்தை மீட்டவர் அவர்தான். இதை பின்பற்றிதான் மற்ற மாநிலங்களும் இலவச ஊசி திட்டத்தையே பின்பற்றின.
இவ்வாறு சிறப்புற நல்லாட்சி புரிந்தார். ஒரு சிறந்த முதல்வர், சிறந்த தலைவர் இன்று அதையும் தாண்டி இந்த தமிழ்நாட்டு பிள்ளைகள் எல்லாம் அப்பா, அப்பா என்று அன்பாக அழைக்கின்றார்கள். காரணம் அவர் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தரப்பினருக்கும் பல்வேறு பணிகளை, பல்வேறு மக்கள் நலன்பயக்கும் திட்டங்களை செய்து வருகின்றார். இப்படி பல்வேறு சிறப்புகளை செய்துவரும் திராவிட மாடல் முதல்வர் பல்லாண்டுகள் வாழ்ந்திட வேண்டும். முதல்வர் செய்திருக்கின்ற சாதனைகளை, திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்கின்ற பணியினை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.
The post முதல்வரின் சாதனைகளை, திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்லும் பணியை தொடர்ந்திடுவோம்: மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழாவில் தயாநிதி மாறன் எம்பி பேச்சு appeared first on Dinakaran.