சென்னை: முதல்வர் மருந்தகம் திட்டத்தால் 50,053 பேர் பயனடைந்துள்ளதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. கடந்த 8 நாட்களில் முதல்வர் மருந்தகங்களில் ரூ.27,42,829 மருந்துகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. முதல்வர் மருந்தகம் திட்டத்தில் 50% முதல் 75% வரை குறைந்த விலைக்கு மருந்துகள் வழங்கப்படுகின்றன. முதல்வர் மருந்தகம் திட்டத்தின் மூலம் 1000 பேர் வேலை வாய்ப்புகளைப் பெற்றுள்ளனர் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. தமிழ்நாடு முழுவதும் கடந்த 24ம் தேதி 1000 முதல்வர் மருந்தகங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
The post முதல்வர் மருந்தகம் திட்டத்தால் 50,053 பேர் பயனடைந்துள்ளதாக தமிழ்நாடு அரசு அறிவிப்பு appeared first on Dinakaran.