மும்பை: மும்பையில் 57 அடுக்குமாடிகள் கொண்ட கட்டடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. பற்றி எரியும் தீயை கட்டுப்படுத்தும் பணிகள் துவங்கியுள்ளதாக தீயணைப்பு துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர். மும்பையில் பைகுல்லா பகுதியில் 57 மாடிகள் கொண்ட குடியிருப்பு கட்டிடம் ஒன்று அமைந்துள்ளது. இந்த குடியிருப்பு கட்டிடத்தில் பலரும் வசித்து வந்தனர்.
இந்தநிலையில், இன்று அடுக்குமாடி கட்டிடத்தின் 42-வது மாடியில் தீ ஏற்பட்டது. இந்த தீயினால் அங்கு புகை சூழ்ந்தது. இதனால் அங்கு வசித்து வந்தவர்கள் அங்கிருந்து அவர அவரமாக வெளியேறினர். இது குறித்து தகவலறிந்த தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். இதனையடுத்து நெருப்பை கட்டுப்படுத்தும் பணியில் தீயணைப்பு துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த அடுக்குமாடி கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தால் அங்கு வசிக்கும் மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.
The post மும்பையில் 57 அடுக்குமாடிகள் கொண்ட கட்டடத்தில் பயங்கர தீ விபத்து! appeared first on Dinakaran.