மும்பை: மும்பை ED அலுவலக தீவிபத்தில் மெகுல் சோக்சி, நீரவ் மோடி, புஜ்பல் வழக்கு ஆவணங்கள் நாசம் என தகவல் வெளியாகி உள்ளது. பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13,850 கோடி கடன் பெற்று மோசடி செய்தவர் மெகுல் சோக்சி. வங்கிகளில் கடன் வாங்கி மோசடி செய்த வழக்கில் தேடப்படுபவர் வைர வியாபாரி நீரவ் மோடி. தெற்கு மும்பை பல்லார்டு எஸ்டேட்டில் அமலாக்கத்துறை அலுவலகத்தில் 4வது மாடியில் நேற்று தீ விபத்து ஏற்பட்டது. 4வது மாடியில் வைக்கப்பட்டிருந்த சோக்சி, நீரவ் மோடி வழக்கு ஆவணங்கள் எரிந்திருக்கலாம் என தகவல் வெளியாகியது. மராட்டிய அரசியல் தலைவர்கள் சகன் புஜ்பல், அனில் தேஷ்முக் வழக்கு ஆவணங்களும் சேதம் என அச்சம் ஏற்பட்டடுள்ளது.
The post மெகுல் சோக்சி, நீரவ் மோடி வழக்கு ஆவணங்கள் சேதம்..!! appeared first on Dinakaran.