பெங்களூரு: பிரதமர் மோடிக்கு 75 வயதாகிவிட்டதால் ஓய்வுபெறும் நேரம் வந்துவிட்டது. பாஜவிற்கு ஒரு தலித் தலைவரை அடுத்த பிரதமராக்கும் அருமையான வாய்ப்பு வாய்த்துள்ளது. பாஜ அதை செய்யுமா என்றும் கேள்வி எழுப்பி கர்நாடக முதல்வர் சித்தராமையா, பதிலடி கொடுத்துள்ளார்.
காங்கிரஸ் கட்சி உண்மையாகவே பிற்படுத்தப்பட்ட மற்றும் எஸ்.சி,எஸ்.டி சமூக மக்களின் நலன் மற்றும் வளர்ச்சியில் அக்கறை கொண்டிருக்குமானால், மல்லிகார்ஜுன கார்கேவை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்று பாஜ மாநிலத் தலைவர் விஜயேந்திரா சவால் விடுக்கும் விதமாக பேசியிருந்தார். இந்நிலையில், விஜயேந்திராவிற்கு முதல்வர் சித்தராமையா பதிலடி கொடுத்துள்ளார். ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜ விதிமுறைகளின் படி, 75 வயது நிறைவடைந்த தலைவர் அரசியலிலிருந்து ஓய்வுபெற வேண்டும்.
பிரதமர் மோடிக்கு செப்டம்பர் 17ம் தேதியுடன் 75 வயது பூர்த்தியடையவுள்ள நிலையில், அடுத்ததாக ஒரு தலித்தை பிரதமராக்க பாஜவுக்கு இதுவொரு அருமையான வாய்ப்பு. அடுத்தவர்களுக்கு பாடம் எடுப்பதை விடுத்து, நீங்கள் (பாஜ) ஏன் ஒரு தலித் தலைவரை பாஜவின் பிரதமராக தேர்வு செய்யக்கூடாது?. பாஜ மாநில தலைவரையாவது ஒரு தலித்தை உங்களால் நியமிக்க முடியுமா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
The post மோடியின் ஓய்வு நெருங்கிவிட்டது ஒரு தலித் தலைவரை பிரதமராக்குமா பாஜ..? முதல்வர் சித்தராமையா கேள்வி appeared first on Dinakaran.