புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் குலமங்கலம், திருமயம் பகுதிகளில் யூகலிப்டஸ் மரங்கள் நட தடை விதிக்க கோரி வழக்கு தொடரப்பட்டது. புதுக்கோட்டை ஆட்சியர், வன அலுவலர் ஆகியோர் பதில் மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. குலமங்கலம், திருமயம் பகுதிகளில் யூகலிப்டஸ் மரங்கள் நடும் பணியை தொடரக்கூடாது என நீதிபதிகள் அறிவுறுத்தி உள்ளனர்.
The post யூகலிப்டஸ் மரம் நட தடை கோரி மனு : பதில் தர ஆணை appeared first on Dinakaran.