டெல்லி: ரயில்களில் 3ம் வகுப்பு குளிர்சாதன பெட்டிகளின் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்க ரயில்வே திட்டமிட்டுள்ளது. நீண்ட தூர ரயில்களில் தூங்கும் வசதி, சாதாரண, முன்பதிவில்லா பெட்டிகள் குறைக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. வருவாயை அதிகரிக்க 3ம் வகுப்பு குளிர்சாதன பெட்டிகளின் எண்ணிக்கையை மேலும் அதிகாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. ரயில்களில் 3ம் வகுப்பு ஏ.சி. பெட்டிகளின் மூலமாக ரூ.30,000 கோடி வருவாய் கிடைப்பதாக கூறப்படுகிறது. 3ம் வகுப்பு ஏ.சி. பெட்டிகள் மூலம் கிடைக்கும் வருவாயை ரூ.37,000 கோடியாக உயர்த்த ரயில்வே திட்டம் என தகவல் வெளியாகியுள்ளது. ரயில்வே துறையின் நடவடிக்கையால் ஏழை, எளிய மக்களின் ரயில் பயணம் பாதிக்கப்படும் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
The post ரயில்களில் ஏ.சி.பெட்டிகளை மேலும் அதிகரிக்க திட்டம் appeared first on Dinakaran.